அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கத் தயார்': துருவ் விக்ரம் அதிரடி

விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கத் தயார் என துருவ் விக்ரம் தெரிவித்தார். 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:13 am

DIN

விக்ரம் - துருவ் இணைந்து நடித்த மகான் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 10) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் மகான் குறித்து பிரபல யூடியூப் தளத்துக்கு துருவ் பேட்டியளித்திருந்தார். அதில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயும் நானும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். அவர் நல்ல கதையுடன் வந்தால் அதில் நடிக்க, நான் தயார். ஹிந்திப் படங்களைப் போல இரு நடிகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என்று தெரிவித்தார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த மகான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ்வின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.