
மறைந்த புனித் ராஜ்குமார் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் சற்று முன் வெளியானது. இந்த டீசர் அவரது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமாருக்கு அவரது அண்ணன் சிவ ராஜ்குமார்தான் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் புனித்தின் சகோதரர்களான சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | கஜோல் நடிக்கும் 'சலாம் வெங்கி' படத்தை இயக்கும் நடிகை ரேவதி
இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத் குமார், ஸ்ரீகாந்த் மேகா, ஆதித்யா மேனன், முகேஷ் ரிஷி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சரண் ராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சாமி ஜே கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை கிஷோர் புரொடக்சன்ஸ் சார்பாக கிஷோர் பதிகொண்டா தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற மார்ச் 17 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...