நடிகை ஊர்வசியின் உறவினர் தற்கொலையால் பரபரப்பு: வெளியான காரணத்தால் ரசிகர்கள் சோகம்

நடிகை ஊர்வசியினுடைய சகோதரரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
நடிகை ஊர்வசியின் உறவினர் தற்கொலையால் பரபரப்பு: வெளியான காரணத்தால் ரசிகர்கள் சோகம்
Published on
Updated on
1 min read

ஊர்வசியின் சகோதரர் கமலின் மனைவி பரிமளா. கணவரைப் பிரிந்த பரிமளா தனது சகோதரர் சுசீந்திரனுடன் விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளார். இருவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக வறுமைக்கு தள்ளப்பட்டனர்.

ஊர்வசியின் சகோதரி கல்பனா உயிரோடிருக்கும்வரை பரிமளாவிற்கு உதவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரிமளாவும், அவரது சகோதரரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அருகில் வசிப்பவர்கள் பரிமளாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இருவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில், உடல் நிலை சரியில்லாதது மற்றும் வறுமையின் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று தாங்கள் அளிக்க வேண்டிய வீட்டு வாடகையை உரிமையாளரிடம் அளித்துவிடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com