12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வடிவேலுவை இயக்கவிருக்கும் கௌதம் மேனன்?

நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். 

Published On :


கௌதம் மேனன் இயக்கியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து தற்போது சிம்பு நாயகனாக நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் மேனன் நடித்து வருகிறார். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கௌதம் மேனன் பேட்டியளித்திருந்தார். 

அதில் அடுத்ததாக வடிவேலு நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாகவும், இந்தப் படம் முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகும் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.