சாலையின் நடுவே மனைவிக்கு முத்தமிட்ட நடிகர்: வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகர் சாலையின் நடுவே தனது மனைவிக்கு முத்தமிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
சாலையின் நடுவே மனைவிக்கு முத்தமிட்ட நடிகர்: வைரலாகும் புகைப்படம்
Updated on
1 min read

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் ஜான் கொக்கேன். இவர் ஏற்கனவே வீரம் படத்தில் நடிகர் அஜித்திற்கு தம்பியாக நடித்துள்ளார். 

இவர் தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பூஜா ராமச்சந்திரனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

இருவரும் அவ்வப்போது தங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பூஜா ராமச்சந்திரன் எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பின்னர் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com