
நடிகை குஷ்பு தொலைக்காட்சியில் ஜாக்பாட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், கல்கி, நந்தினி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
ஜோதி, கோகுலத்தில் சீதை தொடர்களில் சிறப்பு வேடங்களிலும் தோன்றிய அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரை தொடர் ஒன்றில் நாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தனுஷ் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்: மாளவிகா என்ன சொன்னார் தெரியுமா?
கலர்ஸ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மீரா என்ற தொடரில் நடிகை குஷ்பு முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தத் தொடருக்கு கதையையும் அவர் எழுதியுள்ளார்.
இந்தத் தொடர் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
I start my new venture #MEERA today. It's a serial to be aired on @ColorsTvTamil soon. I also write the story for it.
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 14, 2022
Need all your support and encouragement. @sureshmenonnew pic.twitter.com/Q9PIYD46Xt