சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தனுஷ் குறித்து கேள்வி கேட்ட ரசிகர்: மாளவிகா என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷ் குறித்து ரசிகரின் கேள்விக்கு நடிகை மாளவிகாவின் பதில் வைரலாகி வருகிறது. 

Updated On :

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு ரசிகர், 'எனக்கு நீங்கள் பதிலளிக்கும்வரை சாப்பிடப்போவதில்லை' என்று தெரிவிக்க, ''சரி, நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன். காரணம் உணவு மிக முக்கியம்'' என்று பதிலளித்தார். 

Story image

''லவ் யூ என சொல்லுங்கள். அதுவே போதும்'' என ஒரு ரசிகர் கூற, அதற்கு அவர், 'ஹாய்' என்று  அனுப்பியுள்ளார். ''உங்களுக்கு சமீபத்தில் பிடித்த பாடல்'' என்ற ரசிகரின் கேள்விக்கு, ''புஷ்பா படத்திலிருந்து ஸ்ரீவள்ளி பாடல் பிடித்திருக்கிறது. சித் ஸ்ரீராமின் குரலை ரசித்தேன்'' என்று பதிலளித்தார். 

Story image

பின்னர் ''மீண்டும் ஒருமுறை நடிகர் விஜய்யுடன் நடித்தால், அது எந்த மாதிரி படமாக இருக்க வேண்டும்'' என்று கேட்ட ரசிகருக்கு, ''நடிகர் விஜய் நீண்ட வருடங்களாக காதல் கதையில் நடிக்கவில்லை. அவரை காதல் படத்தில் பார்க்க ஆசை. அந்தப் படத்தில் அவருடன் நடிக்க விருப்பம்'' என்று தெரிவித்தார். 

Story image

'மாறன்' வெளியீட்டுத் தேதியை தெரிவியுங்கள் என ரசிகர் கேட்க, 'நானும் அதற்கு தான் காத்திருக்கிறேன்'என்றார். மற்றொரு ரசிகர் ''தனுஷுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது'' என்று கேட்க, அவருடன் நடித்தது நடிப்பு கற்றது போல இருந்தது. நல்ல வழிகாட்டி என்று குறிப்பிட்டுள்ளார். 

''நீங்கள் காதலில் இருக்கிறீர்களா ?'' என்ற ரசிகரின் கேள்விக்கு, ''இல்லை,  அதனால்தான் காதலர் தினத்தில் காதலருடன் இருப்பதற்கு பதிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிளித்து வருகிறேன். என்று பதிலளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.