பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான பப்பி லஹாரி(வயது 69) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
1973ஆம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான பப்பி லஹாரி, இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 2021 ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பப்பி, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இதையும் படிக்க | ‘உக்ரைனை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்’: ஜோ பைடன்
இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த பப்பி, திங்கள்கிழமை வீடு திரும்பிய நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவர் தமிழில் அபூர்வ சகோதரிகள், பாடும் வாணம்பாடி மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் சீலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.