
இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''வலிமை படத்தின் என்னுடைய முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை வாங்கிவிட்டேன்'' என்று குறிப்பிட, அவரது தம்பி பிரேம்ஜி, தயவுசெய்து எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் கங்கை அமரன், ''பிரபு, பிரேமையும் கூப்பிட்டு போ'' என சொல்கிறார். நகைச்சுவைக்காக என்றாலும் ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் ட்விட்டரில் பேசிக்ககொள்வது ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கங்கை அமரனின் மூத்த சகோதரரான பாஸ்கரின் மகள் வாசுகி பாஸ்கரும், நானும் வரனே என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ராஷ்மிகாவுடன் திருமணம் என வெளியான செய்தி உண்மையா?: பதிலளித்த விஜய் தேவரகொண்டா
வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கும் நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோ விடியோக்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, ஜிப்ரான் இந்தப் படத்தின் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த விஜய் டிவி புகழ் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
Prabhu premum kuttittu po…!!!! https://t.co/bLhP4L2PiX
— gangaiamaren@me.com (@gangaiamaren) February 22, 2022