
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா பாதியில் வெளியேறினார். என்னுடைய உடல் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்தபோது அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஆபாச பாடல் பாடிய விவகாரம்: நடிகா் சிம்பு மீதான மற்றொரு வழக்கு ரத்து
அதில், நான் திமிரானாவள் என நினைப்பவர்களுக்கு ஆம் நான் திமிரானவள்தான். நான் தான் எனக்கு மிக முக்கியமானவள். இது உங்களுடைய பிரச்னை, என்னுடைய பிரச்னையல்ல. அப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கவிருக்கிறார். சிம்பு பங்கேற்ற ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...