
ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் துபையில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு பீஸ்ட் பட நாயகி பூஜாவுடன் தனது கிக் பட பாடலுக்கு சல்மான் கான் நடனமாடினார்.
அப்போது மேடையில் பூஜா ஹெக்டேவை நிற்க சொல்லி, அவரது உடையை தனது வாயால் கவ்வினார். கிக் பாடலில் உள்ள நடன அசைவை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அவர் அப்படி செய்தார். இந்தக் காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வயதில் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிக் பாடலநடனத்துக்காக அவர் அப்படி செய்ததாக சல்மானுக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் டிரண்டிங்கில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.