திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இன்றுமுதல் 'வாத்தி'யாராக வகுப்பெடுக்கும் தனுஷ்: வெளியான தகவல்

தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :

தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', 'மாறன்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. இதில் 'மாறன்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  மேலும் 'தி கிரே மேன்' என்ற ஆங்கிலப் படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். 

 சமீபத்தில் தனுஷ் நடித்த ஹிந்திப் படமான அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் 'வாத்தி' படத்தின் அறிவிப்பு மற்றும் 'ராக்கி' பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு பட அறிவிப்பு என தனுஷ் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் 'வாத்தி' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு 'சார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 

Story image

இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.