
சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாயநாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்துக்கு இசையமைத்த தென்மா, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நடிகர் அருண் விஜய்க்கு கரோனா
இந்தப் படத்தில் கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி இந்தப் படத்துக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
It's a wrap for #PaRanjith's next #NatchathiramNagargirathu ✨@beemji @YaazhiFilms_ @kishorkumardop@EditorSelva @tenmamakesmusic@jayaraguart @kalidas700 @officialdushara @shabzkal @KalaiActor @thehari___ @iamSandy_Off @_STUNNER_SAM @pro_guna pic.twitter.com/027pS3PRZp
— Neelam Productions (@officialneelam) January 5, 2022