
அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்திருந்த அட்ராங்கி ரே படத்தின் தமிழ் பதிப்பான கலாட்டா கல்யாணம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன.
இந்த நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் அட்லுரி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்குகிறது. இதனை அறிவிக்கும் விதமாக வெளியான புதிய போஸ்டர் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







