
நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் த்ரிஷா அறிவித்திருந்தார். இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு: தீவிர பிரிவில் தொடர் சிகிச்சை
இதனையடுத்து அவர் தான் முற்றிலும் குணமாகிவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்தப் பதவில், ''இதற்கு முன் நெகட்டிவ் என்ற வார்த்தையை படித்து இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. உங்கள் வேண்டுதல்களுக்கும் அன்புக்கும் நன்றி. 2022 ஆம் ஆண்டே நான் தயார்'' என்று தெரிவித்துள்ளார்.
Never been happier to read the word “negative” on a report
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.