
சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் ஷிவானி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பிரபு தேவாவின் 'பொய்க்கால் குதிரை' பட கிளிம்ப்ஸ் விடியோ இதோ
மேலும் பொன்ராம் இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ஜே பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷிவானி, அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். பதாய் ஹோ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷிவானி நடிக்கிறாரா அல்லது புதிய படத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...