
ஜுனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜுனியர் என்டிஆரின் 30வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை கொரட்டால சவி இயக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | புஷ்பா படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: அல்லு அர்ஜுன் நன்றி
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரட்டால சிவா தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா படத்தை இயக்கியிருந்தார். வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.