
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வருவாய் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் சமந்தா நடனமாடிய பாடல் படத்துக்கு பெரும் பக்க பலமாக அமைந்திருந்தது. குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருக்கிறது.
இதையும் படிக்க | 'மாநாடு' படம் குறித்து ரசிகரின் கருத்து: 'ஒரே காட்சி திரும்ப திரும்ப வருது...' விடியோ பகிர்ந்த பிரேம்ஜி
இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், அன்புள்ள கமல்ஹாசன், உங்கள் நேரத்தை ஒதுக்கி புஷ்பா திரைப்படம் பார்த்தற்கு நன்றி. நீங்கள் மிக இனிமையானவர். எங்கள் அனைவரின் பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படம் பார்த்ததற்கு நன்றி கமல்ஹாசன். பெருமையாக உணர்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
Dearest ULAGANAYAGAN @ikamalhaasan sir
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) January 15, 2022
Thanku so much 4 taking out time & watching our #PushpaTheRiseOnPrime
U r d sweetest Sir
ThankU 4 all d lovely words about d work of all of Us@alluarjun @iamRashmika @aryasukku @MythriOfficial @boselyricist @adityamusic @TSeries pic.twitter.com/BerDdtBg2T