சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்திரித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகளை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருப்பதாக இந்தப் படத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | தீபாவளிக்கு வெளியாகும் ஏகே 61?: தகவல்
முன்னதாக கடந்த ஜன-18 ஆம் தேதி ஜெய் பீம் திரைப்படத்தின் காட்சிகளை படத்தின் இயக்குநர் ஞானவேல் விளக்கும் விடியோ ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஜெய் பீம் திரைப்படம் பெற்றது.
இந்நிலையில், உலகளவிலும் பெரும் கவனம் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படம் 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியிடும் திரைப்படங்கள் பங்கேற்கும் இவ்விழா வருகிற ஜன.23 ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ளது.
Jai Bhim directed by Tha Se Gnanavel & produced by Jyotika, Suriya, Rajsekar Karpoorasundarapandian Official Selection @noidafilmfest
â Noida International Film Festival (@noidafilmfest) January 19, 2022
9th Noida International Film Festival-22https://t.co/bjKNguJyIk #miniboxoffice #filmfestival #filmmarket #filmmaking #filmmakers #shortfilm pic.twitter.com/BmNme7qcFP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

த்ரிஷா என்ன பிரதமரா? ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் | DMK | TVK
பெரிய புரமோஷன்கள் இல்லாமல் வெளியாகும் மாதவனின் ஜிடிஎன்!

ஷஃபிக் சதம், பாபர் அசாம் அசத்தல்: கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஆதிக்கம்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



