
நடிகர் விஜய் தனது ரோலஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து ரூ. 1 லட்சம் அபராதம் வித்தித்து உத்தரவிட்டனர்.
மேலும் நடிகர்கள் மறறவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்ததது. அப்போது, ''காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி சொன்ன கருத்து என்னை புண்படுத்தியுள்ளன. சொந்த உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது.
நிலுவை வரத்தொகையாக ரூ.32.30 லட்சத்தை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி செலுத்தி விட்டோம்'' என்று விஜய்யின் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியத்தின் கருத்துகளை நீக்கப்படுவாத அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.