
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியிருப்பதாகவும், இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தையடுத்து வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலம் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இது குடும்ப உறவுகள் குறித்து பேசும் திரைப்படம். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன் பூவே உனக்காக போன்ற படங்கள் செய்திருந்தார்.
பின்னர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நல்ல கதையை கேட்டேன் என அவர் பாராட்டினார். வம்சி சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார். படத்தின் கதையை கேட்டபோது மிகவும் பிடித்திருந்தது.
விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதால் படத்தில் சண்டைக் காட்சிகள், பாடல்கள் எல்லாம் படத்தில் இருக்கும். இதயத்தை தொடுகின்ற வகையில் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.