
இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்துள்ளார். 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகன் ஆர்ஜித்தும் நடிகராக களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | சிறிய முதலீட்டில் உருவாகி வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லால் மகனின் ஹிரிதயம்
ஆர்ஜித் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படமாக இருக்கும் எனவும், ஒரு நடிகராக அவரது திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.