
'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் இறுதியான வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதையும் படிக்க | சுந்தர்.சி படத்துக்காக இணையும் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்: இசையமைக்கும் யுவன்
இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வரும் மார்ச்-25 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டான்’ திரைப்படமும் அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
#RRRonMarch25th, 2022... FINALISED! #RRRMovie pic.twitter.com/hQfrB9jrjS
— RRR Movie (@RRRMovie) January 31, 2022