
சிறுவன் தனன்னை விக்ரம் என்று அழைத்ததாக நடிகர் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடிவருகின்றனர். இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | அண்ணன் அருண் விஜய்யின் 'யானை' படம் குறித்து வனிதா கருத்து
இந்தப் படத்துக்கு கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவும் மற்றும் அனிருத்தின் இசையும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்துக்காக இப்பொழுதே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறுவன் ஒருவன் அவரது கன்னத்தில் கை வைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, அவன் விக்ரம் என்று சொல்கிறான். அடுத்த தலைமுறையையும் மகிழ்விப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.