கமலின் 'விக்ரம்' படத்தை விமர்சித்த 'கேஜிஎஃப்' பட இயக்குநர் - என்ன சொல்லிருக்காரு பாருங்க!

கமலின் 'விக்ரம்' படத்தை விமர்சித்த 'கேஜிஎஃப்' பட இயக்குநர் - என்ன சொல்லிருக்காரு பாருங்க!

கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல், விக்ரம் படம் குறித்து தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
Published on

கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல், விக்ரம் படம் குறித்து தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கன்னடத்தில் கேஜிஎஃப் போல தமிழில் ஒரு படம் இல்லையே என தமிழ் ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதமாக வெளியான விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

ஓடிடியில் வெளியானாலும் திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகின்றனர். இந்திய அளவில் திரைப்பட பிரபலங்கள் விக்ரம் படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ''ஒட்டுமொத்த விக்ரம் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாக காண்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது.

அனிருத், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். லோகேஷ், எப்பொழுதும் உங்களது படங்களுக்கு நான் ரசிகன். சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவை நினைத்து பெருமையாக இருக்கிறது. ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. சூர்யா சார் நீங்கள் தெறி'' என குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com