விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கிய படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதினார்.
க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் 2020 அக்டோபர் 2 அன்று வெளியானது. ரூ. 199 செலுத்தி இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதற்காக சில விருதுகளையும் அவர் பெற்றார்.
இதனால் க/பெ. ரணசிங்கம் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியானது. சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை லட்சுமி ப்ரியா சந்திரமெளலி பெற்றுள்ளார்.
இதையடுத்து க/பெ. ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடித்த படங்களிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது இந்தப் படத்தில் தான். இரு தமிழ் நடிகைகள் இம்முறை விருது பெற்றும் அந்த நல்வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இனிவரும் காலங்களில் தனது திறமையை மேலும் நிரூபித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுவார் என எதிர்பார்ப்போம்.
இதையும் படிக்க: 68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


