இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

தேசிய விருது நாயகன் சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து   

சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published On :

சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும் (28 பிரிவுகள்), 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் (22 பிரிவுகள்) தேசிய விருதுக்குப் போட்டியிட்டன.  இதில் 9 பிரிவுகளில் 10 தேசிய விருதுகளை தமிழ் திரைப்படங்கள் தட்டிச் சென்றுள்ளன. 

குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்துககு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அந்தப் படத்தில் நடித்த சூா்யா சிறந்த நடிகராகவும் அபா்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில் சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.