பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

'நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான்' - சிம்பு பட நடிகை பகிர்ந்த தகவல்

ஹிஜாப் அணிவதன் காரணம் குறித்து நடிகை சனா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST

ஹிஜாப் அணிவதன் காரணம் குறித்து நடிகை சனா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் சனா கான். அயோக்யா, ஈ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஹிந்தி, தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சனா கான் நடித்துள்ளார். 

சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய சனா கான், அந்த நிகழ்ச்சியில் 2வது இடைத்தை பிடித்தார். முஃபி அனஸ் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்ட சனா கான் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். 

Story image

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சா கான் ஹிஜாப் அணிவதற்கான காரணம் குறித்து பதிவுசெய்துள்ளார். அதில், எனது கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதியில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறை ஒன்றில் நான் இருந்தேன். அந்தக் கனவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதில், உங்கள் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. 

மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்த நாள். பிறந்த நாளின் போது ஹிஜாப் அணியத் துவங்கினேன். இனி இதை ஒருபோதும் அகற்றமாட்டேன் என முடிவெடுத்தேன். இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.