காமன் மேனிலிருந்து நான் மிருகமாய் மாற - சசிகுமார் பட நிறுவனம் அறிவிப்பு

சசிகுமார் நடித்துவரும் காமன்மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
காமன் மேனிலிருந்து நான் மிருகமாய் மாற - சசிகுமார் பட  நிறுவனம் அறிவிப்பு

சசிகுமார் நடித்துவரும் காமன்மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் சமீபத்தில் 14வது ஆண்டில் அடியெடுத்துவைத்தது. இந்தப் படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கருதப்படுகிறது.

இதனையடுத்து விரைவில் அடுத்ததாக இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். நீண்ட ஆண்டுகளாக இதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது பதிவு உற்சாகத்தை அளித்துள்ளது. 

சசிகுமார் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்கள் தயாராகிவருகின்றன. இதில் காமன் மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக செந்துார் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தை கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com