கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிக்க கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் விருமன். கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குநர் முத்தையாவுடனும், கடைகுட்டி சிங்கம் படத்துக்கு பிறகு 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனும் கார்த்தி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். முதல் படம் என்பதால் இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்திலிருந்து வெளியான கஞ்சா பூ கண்ணால பாடல் மிகவும் பிரபலமானது.
கார்த்தியின் விருமன் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியே வெளியாகும் என்று 2டி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, ஆர்கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, வசுமித்ரா, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









