குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எப்போது? டிடிவி தினகரன் கேள்வி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில், குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதல்வர் உள்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது? என டிடிவி தினகரன் கேள்வி

முதல்வர் விஜய் / டிடிவி தினகரன் - தினமணி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில், குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதல்வர் உள்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தகாத குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கடந்த திங்கள்கிழமை ஆட்சியர் புகார் அளித்த நிலையில், 4 நாள்களுக்குப் பிறகு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பலரும் இதுபற்றி பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மிகவும் தாமதமாகவே கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,
"குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது – குற்றத்தை மூடி மறைத்துப் பாதுகாத்த முதல்வர் உள்பட அனைவரின் மீதான நடவடிக்கை எப்போது?
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மூடி மறைக்க முயன்று, அவ்விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்ற பிறகு, அவரைப் பாதுகாத்துத் தப்பிக்க வைக்கவோ, நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்தவோ முடியாமல் வேறு வழியின்றி, கைது செய்திருக்கிறது இந்த கொடுங்கோல் தவெக அரசு.
மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி, அவருக்குத் தாங்க முடியாத மன உளைச்சலைக் கொடுத்தது குற்றம் என்றால், அத்தகைய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டே, அதனை மூடி மறைக்க முயன்றவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகள்தான்!
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரை மறைத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் தலைமைச் செயலாளர்; புகார் அளித்தால்தான் விசாரிக்க முடியும் என்ற நிலையில் அலட்சியத்தோடு செயல்பட்ட காவல்துறைத் தலைவர்; இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அது ஒரு வதந்தி (Rumour) என்று இக்குற்றத்தை திசைதிருப்ப முயன்ற சட்டத்தையே மதிக்காத சட்டத்துறை அமைச்சர்; இவை அனைத்திற்கும் மேலாக, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புகாரைக் கண்டும் காணாததுபோல மௌனம் காத்த முதல்வர் என இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு, புகாரை மூடி மறைந்து காப்பாற்ற முயன்ற அனைவருமே சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதுதான் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.
சாதாரணக் குடிமகன் தவறு செய்தால் உடனடியாகப் பாயும் சட்டம், ஆளுங்கட்சியின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களிடம் மட்டும் செயலிழந்துவிடுவதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, அல்லது ஆளும் தவெகவின் ஆட்சியா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்
சூழாது செய்யும் அரசு”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு உணர்த்தும் நியதி போல, ஆட்சிமுறை தவறி, விளைவுகளை ஆராயாமல் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தனது செல்வத்தையும், குடிமக்களையும் ஒரே நேரத்தில் இழப்பான். அத்தகைய நிலையைத் தவெக அரசும், அதன் முதல்வர் ஜோசப் விஜய்யும் அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
à®à¯à®±à¯à®±à®®à¯ à®à®¾à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ à®à¯à®¤à¯ â à®à¯à®±à¯à®±à®¤à¯à®¤à¯ à®®à¯à®à®¿ மறà¯à®¤à¯à®¤à¯à®ªà¯ பாதà¯à®à®¾à®¤à¯à®¤ à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ à®à®à¯à®ªà® à®à®©à¯à®µà®°à®¿à®©à¯ à®®à¯à®¤à®¾à®© நà®à®µà®à®¿à®à¯à®à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 28, 2026
பà¯à®£à¯ à®.à®.à®à®¸à¯. à®à®¤à®¿à®à®¾à®°à®¿à®à¯à®à¯ à®à®ªà®¾à®à®à¯ à®à¯à®±à¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ à®à®©à¯à®ªà¯à®ªà®¿à®¯ à®à¯à®±à¯à®±à®à¯à®à®¾à®à¯à®à¯à®à¯à®à¯ à®à®³à¯à®³à®¾à®© தவà¯à® à®à®®à¯.à®à®²à¯.à®. à®à®°à¯à®³à¯ விà®à¯à®©à¯à®·à¯ à®®à¯à®¤à®¾à®© பà¯à®à®¾à®°à¯ à®à®°à®¿à®¯ நà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯â¦
Summary
When will action be taken against CM Vijay on kallakurichi MLA issue: TTV Dhinakaran
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


