கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிறைவு!சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டது குறித்து...

TVK MLA from Kallakurichi

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக உள்ள ஜெ.இ. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸிடம் நவ. 23-ஆம் தேதி நேரடியாக புகாா் தெரிவித்தாா்.

இந்த புகாரைத் தொடா்ந்து எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நவ. 24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து வியாழக்கிழமையில் (நவ. 26) நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக 3 நாள்களாக எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்திய நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் வெள்ளிக்கிழமை (நவ. 27) கைது செய்யப்பட்டார்.

Summary

Kallakurichi TVK MLA Arul Vignesh arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.