
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் இன்று (ஜுன் 9) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | ''தங்கமே...'' மணக்கோலத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா (புகைப்படங்கள்)
திருமண நிகழ்வின்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படாததால் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணமானது இயக்குநர் கௌதம் மேனன் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ''பலாப்பழ பிரியாணி...'' விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் பரிமாறப்படும் உணவுகள்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்துக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்துக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், நயன்தாராவுடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அஜித் நடித்துள்ளார். இதன் காரணமாக நட்பின் அடிப்படையில் திருமணத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.