
திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படம் 3 வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரு.350 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் ரூ.500 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஓடிடி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். விக்ரம் படத்துக்கு கிடைத்த வாரம் தள்ளி ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
இதையும் படிக்க | விஜயகாந்துக்கு காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல்
திரையரங்குகளில் மக்களின் ஆதரவு கிடைத்துவரும் நிலையில் அதற்குள் ஓடிடியில் வெளியாகவிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விக்ரம் திரைப்படம் தனக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளதாக விக்ரம் படத்தின் வெற்றிவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.