ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

விஜயகாந்துக்கு கால் விரல் அகற்றம்

நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளது. 

Updated On :

நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளது. 

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். அவ்வப்போது அவரது பெயரில் அறிக்கைகள் மட்டும் வெளியாகி வந்தன. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் படத்தில் நடிக்கவில்லை எனவும், அவரது இருப்பு படத்தில் இருக்கும்  எனவும் இயக்குநர் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார். 

விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக விஜயகாந்த்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல் பரவியது. 

இந்த நிலையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துர்களின் ஆலோசனைப் படி விரல் அகற்றப்பட்டது. 

மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதலங்களில் பரவும் பொய்யானல வதந்திகளை கழ நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.