விவசாயி கொலை வழக்கு! ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் சரண்!

கொலை வழக்கு
திருச்சி அருகே குழுமணியில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 5 போ் மணப்பாறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.
திருச்சி மாவட்டம், குழுமணி பேரூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த்குமாா் (45). விவசாயி. இவரும், இவரது மனைவி முத்துலட்சுமியும் வெள்ளிக்கிழமை மாலை கால்நடைகளை வீட்டுக்கு ஓட்டி வந்த போது, கரூா் புறவழிச் சாலையில் அவா்களை வழிமறித்த மா்ம நபா்கள், ஆனந்த்குமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஆனந்த்குமாரின் வீட்டுக்கு அருகிலுள்ள பிரபாகரன் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 22-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பிரபாகரனின் மகன் திவாகா், அலெக்ஸ் குடும்பத்தினா் ஆனந்த்குமாரை மிரட்டி, இவரது சகோதரி சரண்யாவைத் தாக்கியுள்ளனா்.
இது குறித்து சரண்யா, தனது அண்ணன் ஆனந்த்குமாருடன் சென்று ஜீயபுரம் போலீஸாரிடம் புகாரளித்தாா். போலீஸாா் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். இருப்பினும் முன்விரோதத்தில் இருந்த பிரபாகரன் குடும்பத்தினா், ஆனந்த்குமாரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய குழுமணி பேரூா் அக்ரஹாரத்தைச் சோ்ந்த பிரபாகரன் (52), இவரது மனைவி சசிகலா (50), மகன்கள் அலெக்ஸ் (28), திவாகா் (21), இவரின் மனைவி கோபிகா (19) ஆகிய 5 பேரும் மணப்பாறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா். இவா்களை ஜீயபுரம் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பணியிட மாற்றம்: கொலையான ஆனந்த்குமாரின் தங்கை ஜீயபுரம் போலீஸாரிடம் அளித்த புகாரை சரிவர கையாளாத காவல்நிலைய எழுத்தா் சங்கா் என்பவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி மாவட்ட எஷ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

