கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

திருச்சி அருகே விவசாயி வெட்டிக் கொலை

திருச்சி அருகே குழுமணி பகுதியில் முன்விரோதம் காரணமாக விவசாயி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பிரதிப் படம்

Updated On :

திருச்சி அருகே குழுமணி பகுதியில் முன்விரோதம் காரணமாக விவசாயி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், குழுமணி பேரூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ஆனந்த் (40), விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி (35). இவா்களுக்கு குழந்தை இல்லை.

வெள்ளிக்கிழமை இருவரும் அருகிலுள்ள வயல்வெளியில் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் ஆனந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் முகம் சிதைந்து, நிகழ்விடத்திலேயே ஆனந்த் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா், ஆனந்தின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்க்ரே பாா்வையிட்டு விசாரித்தாா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில், ஆனந்த்துக்கும், அருகிலுள்ள சிலருக்கும் நீண்டகாலமாக இடப்பிரச்னை இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.