
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமவில்லன் படங்ளுக்கு பிறகு தனுஷ் - இயக்குநர் மித்ரன் ஜவஹர் 4வது முறையாக இணைந்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தில் தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி காண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பணியாற்றுகின்றனர். இதனால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முதல் பாடல் வருகிற ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு 3வது போஸ்டர்
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Make way for DnA #Thiruchitrambalam first single releases on June 24th! Title ennava irukum? Watch this video! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_Prasanna @theSreyas pic.twitter.com/0Kw5tvTRcX
— Sun Pictures (@sunpictures) June 22, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...