காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடிகை மீனாவின் கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

நடிகை மீனாவின் கணவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

Published On :

நடிகை மீனாவின் கணவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 48. 

நடிகை மீனாவின் கணவரின் மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக பாதித்தது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். 

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என ஊடகத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். கரோனா அவரது நுரையீரலை வெகுவாக பாதித்தது. தயவுசெய்து அவர் கரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி, மக்களை அச்சமுறுத்தாதீர்கள். நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்தான் ஆனால் தயவுசெய்து அச்சமுறுத்தாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில்  ரஜினிகாந்த் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சரத்குமார், குஷ்பு, பிரபு தேவா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.