
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகராக வெற்றி பெறுவதில் தீவிரமாக இருக்கிறார் கமல்ஹாசன்!
விக்ரம் வெற்றியின் காரணமாக முடங்கிக் கிடந்த அவருடைய திரைப்படங்கள் எல்லாம் உயிர் பெறத் தொடங்கியுள்ளன.
இந்த வகையில் தேவர் மகன் -2, இந்தியன் - 2 , சபாஷ் நாயுடு போன்ற படங்கள் ஒவ்வொன்றின் படப்பிடிப்பும் அடுத்தடுத்துத் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, ஏற்கெனவே, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மற்றொரு படத்துக்கு கமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிக்க: கமலின் விக்ரம் ஓடிடியில் வெளியாகும் தேதி ? - ப்ரமோ விடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியன் - 2 படத்திலும் தேவர் மகன் - 2 படத்திலும் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதியை படக் குழுவினர் அணுகியுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, ரஜினிகாந்த், விஜய் ஆகியோரின் மெகா ஹிட் படங்களில் வில்லனாகத் தோன்றித் தடம் பதித்த விஜய் சேதுபதி, வெற்றிப் படமான விக்ரமில் கமலுக்கும் வில்லனாக நடித்தார்.
புதிய அறிவிப்புகள் வெளியாகும்போது, விஜய் சேதுபதியின் வில்லன் பயணம் உறுதிப்படும்.
மேலும், பிற மொழிகளிலும் விக்ரம் பெற்ற வெற்றியின் காரணமாக, புதிய படங்களும் பிற மொழிகளிலும் வர வேண்டும் என்றும் கமல்ஹாசன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.