
மாயோன் திரைப்பட இயக்குநர் கிஷோருக்கு நடிகர் சிபி சத்யராஜ் தங்க சங்கிலியை பரிசளித்தார்.
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படம் வெற்றிபெற்றதையடுத்து பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். விக்ரம் பட வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கு கார் பரிசளித்ததுபோல, மாயோன் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கசங்கிலியொன்றை பரிசளித்தார்.
இதையும் படிக்க | திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் அதிரடி கருத்து
தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 'மாயோன்'. இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாயோன் 2 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.