
திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனின் கருத்து வைரலாகிவருகிறது.
ஸ்ருதி ஹாசன் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கிவருகிறார். பிருதிவிராஜ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் ஸ்ருதி ஹாசனுக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரை காதலித்துவருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சமீபத்தில் வெளியான மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் குறித்து அதிரடி கருத்தை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இப்பொழுது திருமணம் செய்துகொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திருமணம் குறித்து உங்களிடம் தெரிவிக்க என்னிடம் பதிலில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...