நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை குஷ்பு, மீரா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடர் விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்தத் தொடருக்கு நடிகை குஷ்பு முதன்முறையாக கதை எழுதியுள்ளார். இந்தத் தொடரில் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகரான சுரேஷ் மேனன் குஷ்புவின் கணவராக நடித்துள்ளார்.
தற்போது இந்தத் தொடரின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் குஷ்பு, தனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார். அப்போது குஷ்பு, தனது கணவரிடம், எங்களுடன் நீங்கள் நேரம் செலவிடுவதில்லை. மருத்துவமனையில் எதாவது பிரச்னையென்றால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூற அதற்கு சுரேஷ் மேனன் அவரை அடித்துவிடுகிறார்.
இதையும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக நுழையும் லாஸ்லியா
பின்னர் கேமராவைப் பார்த்து பேசும் குஷ்பு, இந்த மாதிரி பல பெண்கள் தேவையில்லாமல் கணவரிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு என் புருஷன் செய்தது தப்பு. அதுவும் என் குழந்தைகள் முன்பு என்னை அடித்தது மிகவும் தவறானது என்கிறார். இந்த ப்ரமோ மீரா தொடரானது கணவர் - மனைவிக்கு இடையேயான பிரச்னையை பேசும் தொடர் என்பதை உணர்த்துகிறது.
It's time to react! Help Meera to take the right decision.
â Colors Tamil (@ColorsTvTamil) March 4, 2022
Give a Missed Call to 70955 11111 and #StandWithMeera@khushsundar | #Khusbhu | #Meera | #ColorsTamil pic.twitter.com/7QcFdqWnlN
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








