நாளுக்கு நாள் எகிறும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட வசூல்

முதல் நாளன்று இந்தியா முழுக்க 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 
நாளுக்கு நாள் எகிறும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட வசூல்

சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வசூல் ரூ. 60 கோடியை எட்டியுள்ளது. 

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்த திரைப்படம், மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பலரும் தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டி எழுதியதால் நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 3.55 கோடி மட்டும் வசூலித்த இந்தப் படம் 5-ம் நாளான நேற்று ரூ. 18 கோடியை இந்தியா முழுக்க வசூலித்துள்ளது. ஞாயிறன்று பெற்ற வசூலான ரூ. 15.10 கோடியை வேலை நாளான திங்கள் அன்றும் பெற்று திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தப் படம் ரூ. 60 கோடியை வசூலித்து சாதனை படைத்து வருகிறது. மேலும் உலகளவில் ரூ. 67.35 கோடி வசூலித்ததாகப் படத்தை வெளியிட்ட ஜீ ஸ்டூடியோஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

முதல் நாளன்று இந்தியா முழுக்க 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா காலத்துக்குப் பிறகு வெளியான படங்களில் 5-ம் நாளன்று அதிக வசூலைப் பெற்ற படமாக உள்ளது, தி காஷ்மீர் ஃபைல்ஸ். இதற்கு முன்பு சூர்யவன்ஷி படம் ரூ. 11.22 கோடியை அள்ளியதே சாதனையாக இருந்தது. 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூலைப் பார்க்கும்போது மிகச்சிறிய படமாக வெளியான தி காஷ்மீா் ஃபைல்ஸ், எப்படியும் ரூ. 200 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com