
நடிகைகள் சினேகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர். விளம்பர பட விடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், சினேகா குறித்து தனது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ''நான் சிறு பெண்ணாக இருக்கும்போது, ''ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முதல்முறையாக ஒரு படப்பிடிப்பை பார்த்தேன். அப்போது என் அம்மா, பார்த்தது போதும் வா'' என்று அழைத்தார்கள்.
இதையும் படிக்க | 'பீஸ்ட்' பாடலான ஜாலியோ ஜிம்கானாவுக்கு உண்மையான அர்த்தம் இதுவா ?
ஆனால் அழகான நடிகையான சினேகாவின் நடிப்பை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போழுது அவருடன் இணைந்து நடிக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான் அவரைப் பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'மோகன்தாஸ்', அர்ஜுனுடன் இணைந்து 'தீயவர் குலைகள் நடுங்க' உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.