'பீஸ்ட்' படத்திலிருந்து 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடலின் ப்ரமோ விடியோ நேற்று (மார்ச் 16) மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் கு.கார்த்திக் எழுதியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான அரபிக் குத்து பாடல் ஒரு மாதத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் டிரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாலியோ ஜிம்கானா முழு பாடலும் வருகிற மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் தனியார் யூடியூப் பக்கத்துக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவரிடம் ஜாலியோ ஜிம்கானா என்ற வரிக்கு அர்த்தம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்'' என்று குறிப்பிட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ், பிஜோர்னோ, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. டாக்டர் படத்தைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



