
சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தன் பெயரை பச்சை குத்தியுள்ளதாக விடியோ பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''என்னை எப்பொழுதும் நேசிப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் உனக்கு இப்பொழுது வேறு வாய்ப்பு இல்லை. உன் மனைவியை கண்டுபிடிக்க வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சன்னி லியோன் தன்னுடைய கடந்த காலங்கள் குறித்து அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, ''என்னுடைய வாழ்நாளில் நான் எடுத்த முடிவுகள் வேறு யாரும் எடுக்காதது.
இதையும் படிக்க | ''இளையராஜாவின் மற்றொரு பக்கம்...'' - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த படம்
யாரும் அந்த முடிவுக்குப் போவதை நான் வேண்டுவதில்லை. ஆனாலும் நான் எனக்கு உண்மையாக இருந்தேன். அதுவொன்றே என் வாழ்நாளில் நான் எனக்காக நான் செய்த நல்ல விஷயம்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன். அவருக்கு 2018ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 2017ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதையும் படிக்க | வியப்பில் பாலிவுட்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வார நாள்களில் நம்பமுடியாத வசூல்!
தற்போது இவர் நடித்த 'அனாமிகா' என்ற இணையத் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...