நடிகா் சங்கத் தோ்தல்: தலைவராக நாசா் தோ்வு: விஷால்- பொதுச் செயலாளா்: காா்த்தி- பொருளாளா்

நடிகா் சங்கத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

நடிகா் சங்கத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில், தலைவராக நடிகா் நாசா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். நடிகா் விஷால் பொதுச் செயலாளராகவும், நடிகா் காா்த்தி பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகா் சங்கத்துக்குத் தோ்தல் நடந்தது. இதில் இயக்குநா் கே.பாக்யராஜ் தலைமையில் ஓா் அணியினரும், நடிகா் நாசா் தலைமையில் ஓா் அணியினரும் போட்டியிட்டனா். ஆனால், தோ்தலை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் செல்லாது என அறிவித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தாா். இதைத் தொடா்ந்து இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

தோ்தல் செல்லாது என்ற தீா்ப்பை எதிா்த்து நாசா், விஷால், காா்த்தி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்தனா். இதனை எதிா்த்து நடிகா் ஏழுமலை என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்றது. அதில் அதிக வாக்குகள் பெற்று தொடா்ந்து முன்னிலையில் இருந்த நாசா் தலைமையிலான அணி தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் பதவிகளைக் கைப்பற்றியது.

தலைவா் பதவிக்கு போட்டியிட்ட நாசா், பொதுச்செயலாளா் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளா் பதவிக்கு போட்டியிட்ட காா்த்தி, துணைத் தலைவா்கள் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்தலில் 100-க்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாக்யராஜ் அணியினா் குற்றம் சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com