'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'மாஸ்டர்' படத்துக்கு இயக்குநர் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் 'குலு குலு' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட தகவலால் அதிர்ந்த ரசிகர்கள்
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் சந்தானம் பேசும் புகைப்படத்தை இயக்குநர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சந்தானம் நடிப்பில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்', 'சர்வர் சுந்தரம்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன. இதில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' திரைப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாசா' ஆத்ரேயா படத்தின் தமிழ் பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


