'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். முதலில் இந்தப் படம் மே 6 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாவதால் 'மாமனிதன்' பட வெளியீடு மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'மாமனிதன்' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளாராம். இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜனவரியில் 'மாமனிதன்' படம் பார்த்து பாராட்டி, நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன்.
இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்னையாவும் முடிந்தது சார் நன்றி ரஜினிகாந்த் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


